வெளிநாட்டு ஸ்டைல் சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெசிபி

International Style Chilli Garlic Noodles Recipe

வெளிநாட்டு ஸ்டைல்ல சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் - 1 கப்

வெங்காயம் - 2

கேரட் - 50 கிராம்

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்

சோயா சாஸ் - 1 ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில், ஒரு வாணலியில் நூடுல்ஸை வேகவைத்து கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.

இத்துடன், வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும், கேரட், உப்பு சேர்த்துக் கிளறவும்.

கேரட் பாதி வெந்ததும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கிளறி, வேக வைத்து நூடுல்ஸை போட்டு கலக்கவும்.

நூடுல்ஸ் நன்றாக வெந்ததும், கொத்தமல்லித் தூவி இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெடி..!

You'r reading வெளிநாட்டு ஸ்டைல் சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `ஆவணங்கள் திருடப்படவில்லை; நகல் எடுத்திருக்கலாம்' - ரஃபேல் விவகாரத்தில் யூடர்ன் அடித்த தலைமை வழக்கறிஞர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்