அட்டகாசமான முட்டை மசாலா வறுவல் ரெசிபி

Tasty Egg Masala Fry Recipe

சாதத்திற்கு சூப்பர் சைட் டிஷ் முட்டை மசாலா வறுவல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேக வைத்த முட்டை - 3

வெங்காயம் - 2

தக்காளி - 1

பட்டை - 1

கிராம்பு - 1

சோம்பு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

தனியா - அரை டீஸ்பூன்

மிளகு - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 2 பல்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், தனியா, மிளகு சேர்த்து மிதமான சூடில் வறுக்கவும்.

ஆறியதும், இதனை மிக்சி ஜாரில் போட்டு அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் 2 பேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதில், வேக வைத்து பாதியாக வெட்டி வைத்த முட்டையை சேர்த்து மிதமாக வறுத்து எடுக்கவும்.

மற்றொரு வாணலியில், எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து பொறிந்ததும், வெங்காயம் சேர்த்து நன்றாசக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்த மசாலா, 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், தக்காளி மற்றும் உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயமும், எண்ணெய்யும் தனியாக பிரிந்தப் பிறகு, முட்டையை சேர்த்து மிதமாக கிளறவும்.

இறுதியாக, கொத்தமல்லித்தூவி இறக்கினால் சுவையான முட்டை மசாலா வறுவல் ரெடி..!

You'r reading அட்டகாசமான முட்டை மசாலா வறுவல் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வர் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்