குளிர்ச்சித் தரும் இளநீர் மில்க்க்ஷேக் ரெசிபி

Tasty Tender Coconut MilkShake Recipe

வெயில் காலம் தொடங்கியாச்சி.. நமது உடலை உஷ்ணத்தில் இருந்து பாதுகாக்கதான் இன்னைக்கு இளநீர் மில்க்க்ஷேக் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கப்போறோம்.

தேவையான பொருட்கள்:

இளநீர் - 1

பால் - 300 மிலி

ஐஸ் கட்டி - 3

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி- கால் டீஸ்பூன்

செய்முறை:1

முதலில், இளநீர் வழுக்கையை தனியாக எடுத்துக் கொள்ளவும்.

இதனை மிக்சி ஜாரில் போட்டு, அத்துடன் பால், சர்க்கரை, ஐஸ் க்யூப், ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதனை ஒரு கிளாசில் ஊற்றி பரிமாரவும்.

அவ்ளோதாங்க.. சுவையான மற்றும் ஆரோக்கியமான இளநீர் மில்க் க்ஷேக் ரெடி..!

You'r reading குளிர்ச்சித் தரும் இளநீர் மில்க்க்ஷேக் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மா கா பா ஆனந்த்தை பாடாய் படுத்தும் ஹரிஷ் கல்யாண்.. கலகல ஸ்னீக் பீக்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்