குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட் ஸ்ப்ரெட் கேக்

Yummy Chocolate Spread Cake Recipe

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட் ஸ்ப்ரெட் கேக் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டை - 2

சர்க்கரை - 50 கிராம்

காய்ச்சியப் பால் - 125 மி.லி.,

தேன் - 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணிலா எக்ஸ்டார்க்ட் - கால் டீஸ்பூன்

மைதா - 130 கிராம்

ஆப்ப சோடா - சிறிதளவு

சாக்லேட் ஸ்ப்ரெட் - தேவையான அளவு

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக நுரைப் பொங்கும் வகையில் அடித்துக் கொள்ளவும்.

அத்துடன், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், தேன், வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

பிறகு, மைதா மாவு, ஆப்ப சோடா சேர்த்து நன்றாக கிளறவும். இந்த கலவை தண்ணீயாகவும் இருக்கக்கூடாது. மிக கெட்டியாகவும் இருக்கக்கூடாது.

சரியான பதத்தில் உள்ள இந்த மாவை 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

பின்னர், தவாவை சூடு செய்து அதில், சிறிய தோசைப்போன்று ஊற்றி சுட்டு எடுக்கவும்.

இந்த கேக் மீது சாக்லேட் ஸ்ப்ரெட் தடவி அதன் மீது மற்றொரு கேக் வைத்து மூடினால் போதும்.

அவ்ளோதாங்க.. சுவையான சாக்லேட் ஸ்ப்ரெட் கேக் ரெடி..!

You'r reading குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட் ஸ்ப்ரெட் கேக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சண்டைப்போடும் காதலர்களுக்கானப் படம்! - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  விமர்சனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்