அருமையான சுரைக்காய் கீர் ரெசிபி

Tasty Bottle gourd Gheer Recipes

அருமையான சுவையில் சுரைக்காய் கீர் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கெட்டியான பால் - 750 மி.லி

சுரைக்காய் - 1

நெய் - 2 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 10

பாதாம் - 10

உலர்ந்த திராட்சை - 15

ஏலக்காய் - 3

குங்குமம் பூ - 3

சர்க்கரை - 50 கிராம்

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் பாதியளவு ஆகும் வரை சூடு செய்யவும்.

இதற்கிடையே, சுரைக்காயின் தோல் சீவி, அதனுள் இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு, துருவி வைக்கவும்.

ஒரு வாணலியில், நெய்விட்டு உருகியதும், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை ஆகியவற்றை வறுத்து தனியாக வைக்கவும்.

அதே வாணலியில் மேலும் நெய்விட்டு, தண்ணீர் பிழிந்த சுரைக்காயை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.

சுரைக்காய்யின் பச்சை வாசனைப் போன பிறகு தனியாக எடுத்துக் கொள்ளவும்.

பால் நன்றாக கொதித்த பிறகு, இடித்த ஏலக்காய், குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

பால் பாதியளவு வந்தப் பிறகு, வறத்து வைத்த சுரைக்காயை சேர்த்து ஓரளவுக்கு கெட்டியாகும் வரை வேகவிடவும்.

இறுதியாக, வறுத்து வைத்த முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுரைக்காய் கீர் ரெடி..!

You'r reading அருமையான சுரைக்காய் கீர் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட் ஸ்ப்ரெட் கேக்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்