வெஜ் ஃபுரூட் ஹல்வா ரெசிபி

Veg fruit halwa recipe

உருளைக்கிழங்கு மற்றும் பைனாப்பிளைக் கொண்டு சூப்பர் இனிப்பு வகையான ஹல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு & ஒன்று

அன்னாசிப்பழத் துண்டுகள் & ஒரு கப்

சர்க்கரை & ஒன்றரை கப்

நெய் & 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் & சிறிதளவு

பைனாப்பிள் எசன்ஸ் & சில துளிகள்

முந்திரி & 10

திராட்சை & 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் நெய்விட்டு சூடானதும், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். இதே போல், அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடானதும் மசித்த உருளைக்கிழங்கு, அன்னாசிப்பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.

கலவை கொஞ்சம் கெட்டியாக ஆரம்பிக்கும்போது, நெய் சிறிது சிறிதாக சேர்த்துக்கொண்டே கிளறவும்.

இறுதியாக, ஏலக்காய்த்தூள், எசன்ஸ், வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.

இந்த கலவை ஹல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான வெஜ் ஃபுரூட் ஹல்வா ரெசிபி ரெடி..!

You'r reading வெஜ் ஃபுரூட் ஹல்வா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மொறு மொறு கீரை பக்கோடா ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்