ராகி உருளைக்கிழங்கு கபாப் செய்ய ரெடியா?

Ragi Potato kabab Recipe

உருளைக்கிழங்கு மற்றும் ராகியைக் கொண்டு ஹெல்தி கபாப் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மசித்த உருளைக்கிழங்கு & அரை கப்

ராகி மாவு & அரை கப்

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது & 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா & கால் டீஸ்பூன்

கடலை மாவு & 1 டீஸ்பூன்

எண்ணெய் & 2 டீஸ்பூன்

புதினா & சிறிதளவு

உப்பு & தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் ராகி மாவை மிதமான சூட்டில் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, உப்பு, கரம் மசாலா, பொடியாக நறுக்கிய புதினா, எண்ணெய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், இந்த கலவையை நீண்ட உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில்போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இறுதியாக, ஒவ்வொரு கபாபிலும் குச்சியைக் குத்தி பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான ராகி உருளை கபாப் ரெடி..!

You'r reading ராகி உருளைக்கிழங்கு கபாப் செய்ய ரெடியா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழக எம்.பி.க்கள் தான் படு மோசமாம் ; 5 ஆண்டு செயல்பாடு ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்