சத்தான ராகி இட்லி ரெசிபி

ragi idli recipe

உடலுக்கு மிகவும் சத்துத்தரும் ராகி இட்லி மாவு ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு & 400 கிராம்

உளுந்து & 100 கிராம்

வெந்தயம் & 1 டீஸ்பூன்

உப்பு & தேவையான அளவு

செய்முறை:

முதலில், வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஊற வைத்து பின்னர் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரைத்து வைத்த உளுந்து, வெந்தயம் கலவையுடன் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

அத்துடன், உப்பு சேர்த்து கலக்கி சுமார் ஆறு மணி நேரம் மாவை புளிக்கவிடவும்.

இறுதியாக, வழக்கம்போல் இட்லி ஊற்றுவதைப்போல் இந்த கலவையை ஊற்றி வேகவிட்டு இறக்கி காலை சுற்றுண்டியாக பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான ராகி இட்லி ரெசிபி ரெடி..!

You'r reading சத்தான ராகி இட்லி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுகவின் எதிர்காலத்துக்காக அக்கட்சிக்கு ஆதரவு -ஜெ.தீபா ‘அந்தர்பல்டி’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்