கிரிஸ்பி மசாலா வடை ரெசிபி

Crispy Masala Vadai Recipe

அனைவருக்கும் பிடித்த சூப்பர் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் கிரிஸ்பி மசாலா வடை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாமா..?

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - ஒரு கப்

பட்டை - 1

பூண்டு - 5

இஞ்சி - 1

சோம்பு - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 5

வெங்காயம் - 1

கொத்துமல்லி - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு மிக்ஸி ஜாரில், இஞ்சி, பூண்டு, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அத்துடன், ஊறவைத்த கடலைப் பருப்பை சேர்த்து ஒன்றும் பாதியாக அரைத்துக் கொள்ளவும்.

இதனை ஒர பாத்திரத்தில் கொட்டி, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர், ஒரு வாணலியில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைப்போல் தட்டி அதில்போட்டு பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. கிரிஸ்பியான மசாலா வடை ரெசிபி..!

You'r reading கிரிஸ்பி மசாலா வடை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கெய்லின் அனுபவ ஆட்டம்.... - ராஜஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்