யம்மி பாஸ்தா ரெசிபி

Yummy Pasta recipe

குழந்தைகளுக்கு பிடித்த பாஸ்தா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

                                    
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 2 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 2 பல்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 4
கேரட் - 1 கப்
குடைமிளகாய் - 1 கப்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள்
கொத்துமல்லி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதி வந்ததும் பாஸ்தா, உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பாஸ்தா வெந்ததும், வடிகட்டி தனியாக வைக்கவும்.
ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு சூடானதும், பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக குழையும் வரை வதக்கவும்.
அத்துடன், கேரட், குடை மிளகாய் சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
பின்னர், கரம் மசாலா, சில்லி சாஸ், தக்காளி சாஸ், பாஸ்தா, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான பாஸ்தா ரெடி..!

You'r reading யம்மி பாஸ்தா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேர்தல் சமயத்தில் வெளியாகும் மோகன்லாலின் லூசிஃபர் – ப்ரித்விராஜின் மாஸ்டர் பிளான்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்