சுலபமா செய்யலாம் எக் ஃபிங்கர் ரெசிபி

Easy Cook Egg Finger Recipe

வீட்டிலேயே சுலபமா செய்யக்கூடிய எக் (முட்டை) ஃபிங்கர் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

        

தேவையான பொருட்கள்:
முட்டை - 10
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
சோள மாவு - கால் கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய் துகள் - ரை டீஸ்பூன்
பிரெட் க்ரம்ப்ஸ் - ஒரு கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு & தேவையான அளவு

செய்முறை:
முதலில், பாத்திரத்தில் 8 முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதில், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதன்மீது ஒரு ஸ்டான்ட் வைத்து முட்டை கலவையுடன் தயாராகவுள்ள பாத்திரத்தை வைத்து மூடிப்போட்டு சுமார் 20 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
தட்டில், சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் துகள்கள் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

மற்றொரு தட்டில் பிரெட் க்ரம்ப்சை தயாராக வைக்கவும். ஒரு பொளலில், இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைக்கவும்.

முட்டை நன்றாக வெந்ததும், அதை எடுத்து பிங்கர் போன்று துண்டுகள் போடவும்.

இந்த துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, முதலில் அரிசி மாவு கலவையில் பிரட்டி எடுத்து, பிறகு முட்டையில் துவைத்தெடுத்து இறுதியாக, பிரெட் க்ரம்ப்சில் பிரட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான எக் ஃபிங்கர் ரெசிபி ரெடி..!

You'r reading சுலபமா செய்யலாம் எக் ஃபிங்கர் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேட்பு மனுவில் கையெழுத்திட ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு தடை கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்