ஈஸியா செய்யலாம் சென்னா மசாலா ரெசிபி

Easy Made Chenna Masala recipe

ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ் ... வீட்டிலேயே சென்னா மசாலா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

சென்னா - 200 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

பட்டை - 1

சீரகம் - 1 டீஸ்பூன்

ஏலக்காய் - 3

பிரிஞ்சி இல்லை - 1

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 4 பல்லு

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில், குக்கரில் சென்னா கொஞ்சம் உப்பு தண்ணீர் சேர்த்து 2 விசில்விட்டு வேக வைக்கவும்.

வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கியதும், வெங்காயம் சேர்க்கவும்.

வெங்காயம் நன்றாக வெந்ததும், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பிறகு, வேக வாய்த்த சென்னா கடலை, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறி வேகவைக்கவும்.

இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சென்னா மசாலா ரெடி...!

You'r reading ஈஸியா செய்யலாம் சென்னா மசாலா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லாலு அட்வைஸ் சொன்னதால் காங்கிரசில் இணைகிறேன் - சத்ருகன் சின்கா அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்