சூப்பர் பிரேக் ஃபாஸ்ட் நாண் ரெசிபி

Tasty BreakFast Naan Recipe

ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. சூப்பரான காலை நேர உணவு நாண் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

தயிர் - கால் டீஸ்பூன்

மைதா - 2 கப்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

வெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில், மைதா மாவு, பேக்கிங் சோடா, தயிர், பேக்கிங் பவுடர், உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இந்த மாவை சுமார் 5 - 7 நிமிடங்கள் வரை பிசைந்து, அதன் மீது கொஞ்சம் எண்ணெய்விட்டு சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பிறகு, மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து சப்பாத்திப் போன்று உருட்டி, தவா அல்லது ஓவனில் சுட்டெடுக்கவும்.

நாண் தயார் ஆனதும் அதன்மீது, வெண்ணெய் தடவி எடுத்தால், சுவையான நாண் ரெடி..!

You'r reading சூப்பர் பிரேக் ஃபாஸ்ட் நாண் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அனைவருக்கும் பிடித்த மீன் பிரியாணி ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்