புத்துணர்ச்சித் தரும் நிம்பு பானி ரெசிபி

Nimbhu Paani Recipe

வெயிலுக்கு இதமான, உடலுக்கு புத்துணர்ச்சித் தரும் நிம்பு பானி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். இது ஒருவகை எலுமிச்சைப்பழ ஜூஸ் தான்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 2

பொடித்த சர்க்கரை - கால் கப்

பிளாக் சால்ட் - 2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை, பிளாக் சால்ட், சீரகப் பொடி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

பிறகு, தம்ளர்களில் ஐஸ் கட்டி சேர்த்து தயாராகவுள்ள ஜூஸை ஊற்றி, அதன்மீது நறுக்கிய புதினா இலைகளை தூவவும்.

வெயிலுக்கு புத்துணர்ச்சித் தரும் நிம்பு பானி ரெடி..!

You'r reading புத்துணர்ச்சித் தரும் நிம்பு பானி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 30 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறை... ஸ்ரீ ராம பக்தாஸ்களை ஓரங்கட்டிய பாஜக

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்