கமகமக்கும்.. வாலை கருவாடு கிரேவி ரெசிபி

Vaalai Karuvadu Gravy Recipe

ஹலோ மக்களே.. சுவையான வாலை கருவாடு கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வாலை கருவாடு துண்டுகள் - 10

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - அரை டீஸ்பூன்

பூண்டு - 10

வெங்காயம் - 4

தக்காளி விழுது - ஒரு கப்

குழம்பு மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

வெறும் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

தனியாத் தூள் - 1டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு போட்டு பொரிக்கவும்.
முழு பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி விழுது சேர்த்து கிளறவும். அத்துடன், குழம்பு மிளகாய்த் தூள், வெறும் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

மசாலாவின் பச்சை வாசனை போனதும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து  கொதிக்கவிடவும்.

பிறகு, சுடு தண்ணீரில் சுத்தமாக கழுவி வைத்த வாலை கருவாடு துண்டுகள் போட்டு 3 முதல் 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லித் தூவி இறக்கினால் சுவையான வாலை கருவாடு கிரேவி ரெடி..!

You'r reading கமகமக்கும்.. வாலை கருவாடு கிரேவி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலத்தில் திடீர் தீ விபத்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்