வெயிலுக்கு இதமான நுங்கு ஜூஸ் ரெசிபி

Nungu Juice Recipe

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், உடலில் நீர்சத்து குறைந்து
பலருக்கு சோர்வு ஏற்படும். அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் நுங்கு ஜூஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நுங்கு - 5

நன்னாரி சிரப் - 2 டேபிள் ஸ்பூன்

இளநீர் - ஒரு தம்ளர்

செய்முறை:

முதலில், நுங்குவின் தோலை முழுவதுமாக எடுத்துக் கொள்ளவும்.

பிறகு, மிக்ஸி ஜாரில் நுங்கு, நன்னாரி சிரப் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர், பாதியளவு இளநீர் சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.

இந்த கலவையை தம்ளரில் பாதியளவு ஊற்றி, மீதம் இருக்கும் இளநீரை சேர்த்து கலந்து பருகலாம்.

உடலுக்கு மிகவும் குளிர்ச்சித் தரும் நுங்கு ஜூஸ் ரெடி..!

You'r reading வெயிலுக்கு இதமான நுங்கு ஜூஸ் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 11 ஆண்டுகளில் முதன்முறையாக கேப்டன் ரோகித் சர்மா இல்லாமல் களமிறங்கும் மும்பை அணி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்