சுலபமா செய்யலாம் பாலக் பன்னீர் ரெசிபி

Yummy Palak Paneer recipe

வீட்டிலேயே மிக சுலபமாக செய்யக்கூடிய பாலக் பன்னீர் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - 250 கிராம்

பன்னீர் - 200 கிராம்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 4

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

சீரகம் - அரை டீஸ்பூன்

பூண்டு - 2 பல்

வெங்காயம் - ஒன்று

மஞ்சள் தூள் - கால்

மல்லித் தூள் - அரை

கரம் மசாலா - அரை

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

தக்காளி - 1

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், பாலக் கீரையின் இலைகளை சுடுதண்ணீரில் 2 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

பிறகு, கீரை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தற்போது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி வேக வைக்கவும்.

இந்நிலையில், அரைத்து வைத்த கீரை விழுது, உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும். கூடவே, தயிர் சேர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்.
இறுதியாக, பன்னீர் துண்டுகள் சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கிவிடவும்.

அவ்ளோதாங்க.. சுவையான பாலக்கீரை பன்னீர் ரெடி..!

You'r reading சுலபமா செய்யலாம் பாலக் பன்னீர் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `யாரா இருந்தாலும் 150 சீட் தான்' - சித்தராமையா கருத்தும்... காங்கிரஸ் ரியாக்சனும்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்