காரசாரமான காராபூந்தி ரைத்தா..

காரசாரமான காராபூந்தி ரைத்தா எப்படி செய்றதுனு பார்ப்போம்..

தேவையான பொருட்கள் :

காராபூந்தி - கால் கப்
கெட்டியான தயிர் - ஒரு கப்
உப்பு - தேவைகேற்ப
வெங்கயம் - ஒன்று
சாட் மசாலா - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் தயிர் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

* பிறகு, அதில் சாட் மசாலா, வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கடைசியாக காராபூந்தி மற்றும் கொத்தமல்லி தூவி ஸ்பூன் வைத்து பரிமாறவும்.

* சூப்பரான காராபூந்தி ரைத்தா ரெடி.

* இது அனைத்து வகை சப்பாத்தி, பிரியாணி, மற்றும் புலாவ்களுக்கு பொருத்தமாக இருக்கும். காராபூந்தியை கடைசியாக சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.

You'r reading காரசாரமான காராபூந்தி ரைத்தா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்