மொறு மொறு உருளைக்கிழங்கு லாலிபாப் ரெசிபி

Crispy Potato LollyPop Recipe

வீட்டிலேயே எளிதாக உருளைக்கிழங்கு லாலிபாப் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 6

வெங்காயம் - 1

பிரெட் க்ரம்ப்ஸ் - 5 டேபிள் ஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 1

கரம் மசாலா - 1

மல்லித் தூள் - 1

சோள மாவு - 5 டீஸ்பூன்

கறிவேப்பிலை

கொத்தமல்லி

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். அதில், இடித்து வைத்த இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

அத்துடன், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

பிறகு, கரம் மசாலா, கொத்தமல்லித் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர், சிறிய துண்டுகளாக எடுத்து பெரிய நெல்லிக்காய் அளவில் உருட்டிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சோள மாவில் முக்கி எடுத்து பிறகு, பிரெட் க்ரம்ப்ஸில் உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாராகவுள்ள உருளைக்கிழங்கு உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இறுதியாக, ஒவ்வொரு உருண்டைகளிலும் குச்சி சொறுகினால், சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி..!

You'r reading மொறு மொறு உருளைக்கிழங்கு லாலிபாப் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காரசாரப் பூண்டு சட்னி ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்