அடடே.. சுவையான சால்னா ரெசிபி

Veg Salna Recipe

பரோட்டாவுக்கு அட்டகாசமான சைட் டிஷ் சால்னா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 4

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மல்லித் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

பிரியாணி இலை - 2

பட்டை - 2

ஏலக்காய் - 3

கிராம்பு - 4

சோம்பு - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

பீன்ஸ் - 12

கேரட் - 2

பட்டாணி - ஒரு கப்

உருளைக்கிழங்கு - 1

எண்ணெய் - 3

கொத்தமல்லி

உப்பு

செய்முறை:

ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, சீரகம் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

அத்துடன், நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். கூடவே, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசமனை போகும் வரை வதக்கி இறக்கி ஆறவிடவும்.

இதனை, மிக்ஸி ஜாரில் போட்டு, கூடனே தேங்காய்த் துருவல் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். அவ்ளோதான் மசாலா ரெடி..

இப்போது, குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய் போட்டு பொறிக்கவும்.

பிறகு, நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, அரைத்து வைத்த மசாலா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து, மூடிப் போட்டு 2 விசில்விட்டு வேக வைக்கவும்.

காய்கள் வெந்த நிலையில், இறுதியாக கொத்தமல்லித் தூவி இறக்கினால் அட்டகாசமான சால்னா ரெடி..!

You'r reading அடடே.. சுவையான சால்னா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமகமக்கும் வெந்தயக் குழம்பு ரெசிபி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்