முருங்கைக் கீரை கோதுமை வடை ரெசிபி

Drumstick leaves wheat vadai recipe

குழந்தைகள்  விரும்பி சாப்பிடக்கூடிய முருங்கைக் கீரை கோதுமை வடை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை இலை - 1/2 கப்

கோதுமை மாவு - ஒரு கப்

தண்ணீர் 1/3 கப்

சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - ஒன்று

சோடா மாவு - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கீரையை கழுவி ஒரு சுத்தமான துணியில் உலர்த்தவும்.

சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பின், எண்ணெய் இல்லாமல் மற்ற பொருள்களை ஒன்றாக சேர்த்துக் கெட்டியாக கலந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணையை ஊற்றி காய வைத்து பின் கீரையை மாவுடன் சேர்த்து பிசைந்து எண்ணெய் சட்டியில் பொன்னிறம் மாறாமல் பொரித்து எடுத்தால் கோதுமை கீரை வடை தயார்.

You'r reading முருங்கைக் கீரை கோதுமை வடை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொடக்கு மேல சொடக்கு.. இறுதியில் ஜெயித்தது யார்? - அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்