க்ரீமி மயோனேஸ் ரெசிபி

Creamy Mayonnaise Recipe

வீட்டிலேயே மயோனேஸ் மிக எளிமையாக எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

முட்டை - 1

மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்

கடுகுத் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு கப்

செய்முறை:

முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

அத்துடன், மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, கடுகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு கப் எண்ணெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சுமார் 4 முதல் 5 முறை வரை மிக்ஸியில் அடிக்கவும்.

இதனை, ஒரு கிண்ணத்தில் மாற்றி பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான க்ரீமி மயோனேஸ் ரெடி..!

You'r reading க்ரீமி மயோனேஸ் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய்க்கு சொன்ன கதையில் சூர்யா கமிட்டானது எப்படி? சிவா - சூர்யா பட அப்டேட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்