இது சாப்பிடும் பந்து - யம்மி பிரட் சீஸ் பால்ஸ் ரெசிபி

Yummy Bread Cheese Balls Recipe

வீட்டிலேயே சுவையான பிரட் சீஸ் பால்ஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

உலர்ந்த பிரட் தூள் - ஒரு கப்

பிரட் துண்டுகள் - 10

சீஸ் - தேவையான அளவு

இத்தாலியன் சீசனிங் - கால் டீஸ்பூன்

சோள மாவு

காய்ந்த மிளகாய் துகள்

உப்பு

செய்முறை:

உலர்ந்த பிரட் தூள்களுடன் இத்தாலியன் சீசனிங், உப்பு, காய்ந்த மிளகாய் துகள் ஆகியவை கலந்து கொள்ளவும்.

பின், பிரட் துண்டுகளை சிறிது தண்ணீரில் நினைத்து அத்துடன், சீஸ் சேர்த்து உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். இதனை, சோள மாவில் பிரட்டி உருண்டை செய்து கொள்ளவும்.

பின் சிறிதளவு சோழ மாவை தண்ணீரில் கரைத்துக் கொண்டு, பிடித்த உருண்டையை அதில் முக்கி, பின்னர் ஏற்கனவே கலந்து வைத்துள்ள பிரட் தூள் கலவையுடன் உருட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பிரட் சீஸ் பால் ரெடி..!

You'r reading இது சாப்பிடும் பந்து - யம்மி பிரட் சீஸ் பால்ஸ் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடடே.. இது என்ன புதுசா நூடுல்ஸ் பக்கோடா ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்