குழந்தைகள் விரும்பி பருகும் பாதாம் சர்பத் ரெசிபி

Badam Sharbat Recipe

குழந்தைகளுக்கு பிடித்த பாதாம் சர்பத் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பாதாம் - 100 கிராம்

சர்க்கரை - அரை கிலோ

ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில், பாதாம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பிறகு, காலையில் தோலை நீக்கிவிடவும்.

இந்த பாதாமை, மிக்சி ஜாரில் போட்டு, அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடானதும், சர்க்கரை சேர்த்து கரையவிடவும். கூடவே, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

சர்க்கரை முழுவதுமாக கரைந்தப் பிறகு, அரைத்து வைத்த பாதாம் விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

இந்த கலவை லேசாக கெட்டியாக ஆரம்பிக்கும். பிறகு, மிதமான சூட்டில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கி ஆற வைக்கவும்.

இதனை ஒரு ஜாரில் ஊற்றி வைத்தால் சுவையான பாதாம் சர்பத் ரெடி..! இந்த சர்பத்தை பிரிட்ஜ்ஜில் வைத்து பரிமாறலாம். பரிமாறும்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

You'r reading குழந்தைகள் விரும்பி பருகும் பாதாம் சர்பத் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற துபாய் ஃபிரேம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்