சட்டுன்னு செய்யலாம் மீன் 65 ரெசிபி

Fish 65 Recipe

சிக்கன் 65 சாப்பிட்டு இருப்பீங்க.. மீன் 65 சாப்பிட்டிருக்கீங்களா ? சரி, சட்டுன்னு செய்யக்கூடிய மீன் 65 எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

முள் இல்லாத மீன் துண்டுகள் - 15

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

சோள மாவு - 1 டீஸ்பூன்

மைதா - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

முட்டை - ஒன்று

நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

தயிர் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

கறிவேப்பிலை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், ஒரு கிண்ணத்தில் முள் எடுத்த மீன் துண்டுகள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு விழுது, முட்டை, உப்பு போட்டு சேர்த்து நன்றாக பிசைந்து சுமார் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பூண்டு, இஞ்சி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தயிர் சேர்த்து வதக்கவும்.

பிறகு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இறுதியாக, பொரித்த மீன் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கமகமக்கும் மீன் 65 தயார்..!

You'r reading சட்டுன்னு செய்யலாம் மீன் 65 ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'தீவிரவாதி ஒரு இந்து' என்று நான் கூறியது சரித்திர உண்மை...! அழுத்தம் திருத்தமாக கூறிய கமல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்