அசத்தலான மீன் மஞ்சூரியன் ரெசிபி

Tasty Fish Manjuriyan Recipe

சிக்கன் மஞ்சூரியன், காலிப்பிளவர் மஞ்சூரியன் போன்று அசத்தலான சுவையில் மீன் மஞ்சூரியன் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..


தேவையான பொருட்கள்:

முள் இல்லாத மீன் துண்டு - அரை கிலோ

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 4

சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

மைதான மாவு - 2 டீஸ்பூன்

கடலை மாவு - 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 3 டீஸ்பூன்

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்

பூண்டு - 10 பல்

செய்முறை:

முதலில், ஒரு கிண்ணத்தில் மீன் துண்டுகள், சோளமாவு, அரிசி மாவு, மைதா மாவு, கடலை மாவு, மிளகாயத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து மீன் உடையாதபடி நன்றாக கலக்கிக் கொள்ளவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிரட்டி சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் மீன் துண்களை போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து வேக வைக்கவும். கூடவே, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இந்நிலையில், பொரிச்ச மீன் துண்டுகளை அத்துடன் சேர்த்து மிதமாக கிளறிவிடவும்.

இறுதியாக, கொத்தமல்லித்தூவி இறக்கினால் சுவையான மீன் மஞ்சூரியன் ரெடி..!

You'r reading அசத்தலான மீன் மஞ்சூரியன் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூர்யாவுடன் போட்டிப்போட களமிறங்கிய பிரபுதேவா, நயன்தாரா !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்