சுடச்சுட பொரி பக்கோடா ரெசிபி

Pori Pakkoda Recipe

வீட்டுலயே சுடச்சுட பொரி பக்கோடா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பொரி - ஒரு கப்

கடலை மாவு - 5 டீஸ்பூன்

அரிசி மாவு - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை சிட்டிகை

சிவப்பு மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - ஒன்று

இஞ்சி - சிறிதளவு

எண்ணெய்

உப்பு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் பொரியை கொட்டி அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரிசி மாவு, கடலை மாவு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து பக்கோடா பதத்திற்கு தயார் செய்யவும்.

அதேவேளை, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான பொரி பக்கோடா ரெடி..!

You'r reading சுடச்சுட பொரி பக்கோடா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்து என்ற நாமகரணம் எப்போது வந்தது தெரியுமா..? மீண்டும் சர்ச்சையை கிளப்பும் கமல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்