வித்தியாசமான சமையல் - மீல் மேக்கர் வடை ரெசிபி

Meal Maker Vadai recipe

வீட்டிலேயே வித்தியாசமான மாலை நேர ஸ்னாக் மீல் மேக்கர் வடை ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

செய்முறை:

மீல் மேக்கர் - 100 கிராம்

பொட்டுக் கடலை மாவு - அரை கப்

பெரிய வெங்காயம் - 1

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

கறி மசாலா - ஒரு டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

சோம்பு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூம் - கால் டீஸ்பூன்

சோள மாவு - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி

புதினா

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு & சீரகத்தூள், கறி மசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி,, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

பிறகு, வெந்நீரில் கேவ வைத்து பொடியாக நறுக்கிய மீல் மேக்கர், உப்பு சேர்த்து வடை பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

இடையே, வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைப்போல் தட்டி, சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. வித்தியாசமான மீல் மேக்கர் வடை ரெடி..!

You'r reading வித்தியாசமான சமையல் - மீல் மேக்கர் வடை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமேதியில் போட்டியிடுவேன்! பிரியங்கா காந்தி தகவல்!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்