அசத்தலான ருசியில் நண்டு ரசம் ரெசிபி

Tasty Crab Rasam Recipe

அசைவ பிரியர்களே.. உங்களுக்காக இன்னைக்கு நண்டு ரசம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

நண்டு - 2

சின்ன வெங்காயம் - 5

தக்காளி - 2

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

பட்டை - 1

ஏலக்காய் - 2

கிராம்பு - 3

பிரியாணி இலை - 2

இடித்த மிளகு - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

தேங்காயப்பால் - ஒரு கப்

சர்க்கரை - ஒரு சிட்டிகை

கொத்தமல்லி

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் நண்டுவை சுத்தம் செய்து இடித்து வைத்துக் கொள்ளவும். இதனை, மஞ்சள் தூள், மிளகாயத்தூள், உப்பு, தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிட்டு அதன் சாறை எடுக்கவும்.

ஒரு வாணலியில், வெண்ணெய், எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து வதக்கவும். பிறகு, பூண்டு, மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அத்துடன், சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கியதும், தக்காளி சேர்க்கவும்.

தக்காளி வெந்ததும், கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர், தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும், கொதிக்க வைத்த நண்டுக் கலவையுடன், கொஞ்சம் தண்ணீர், உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.

இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவினால் சுவையான நண்டு ரசம் ரெடி..!

You'r reading அசத்தலான ருசியில் நண்டு ரசம் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்! எடப்பாடிக்கு சிக்கல் ஆரம்பம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்