ரெஸ்டாரென்ட் ஸ்டைல் மீன் சுக்கா ரெசிபி

Fish Chukka Recipe

வீட்டிலேயே ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் மீன் சுக்கா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வஞ்சிர மீன் - அரை கிலோ (முள் எடுத்தது)

சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 2

வெங்காயம் - 1

பெரிய தக்காளி - 1

மிளகுத்தூள்  1 டீஸ்பூன்

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 5

ஏலக்காய் - 3

சோம்பு - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டேபிஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை

கொத்தமல்லி

எண்ணெய்

உப்பு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில், அரிசி மாவு, சோழ மாவு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

இதில், மீன் துண்டுகளை போட்டு கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானது, மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ,சீரகம் சேர்த்து பொரிக்கவும். கூடவே, பொடியாக நறுக்கிய வெங்காய, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

தக்காளி சேர்த்து வேகா வைத்ததும், மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர், வறுத்துவைத்த மீன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மீன் சுக்கா ரெடி..!

You'r reading ரெஸ்டாரென்ட் ஸ்டைல் மீன் சுக்கா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாஜக கூட்டணி தலைவர்களுக்கு அமித் ஷா விருந்து ... ஓபிஎஸ், இபிஎஸ் பங்கேற்கின்றனர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்