டேஸ்டி இட்லி மஞ்சூரியன் ரெசிபி

Tasty Idly Manjurian Recipe

இட்லி வைத்து வித்தியாசமா இட்லி மஞ்சூரியன் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

இட்லி - 4

வெங்காயம் - 1

குடை மிளகாய் - 1

மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு - 3

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1

சோயா சாஸ் - கால் டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்

சில்லி சாஸ் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

தயாராகவுள்ள இட்லியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில், மைதா மாவு, சோள மாவு, உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

இந்த கலவையில் இட்லி துண்டுகளை போட்டு கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இட்லி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மற்றொரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

பின்னர், வெங்காயம் சோர்த் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
கூடவே, நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அத்துடன், சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.

பிறகு, பொரித்த இட்லி துண்டுகளை உடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி..!

You'r reading டேஸ்டி இட்லி மஞ்சூரியன் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒப்புகைச் சீட்டைத் தான் முதலில் சரிபார்க்க வேண்டும்! தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்