சுலபமா சுவையா செய்யலாம் குஸ்கா ரெசிபி

Yummy Kuska Recipe

வீட்டிலேயே ரொம்ப சுலபமா செய்யக்கூடிய குஸ்கா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் -2

தக்காளி - 2

பிரியாணி இலை -2

பட்டை - 1

நட்சத்திர சோம்பு - 2

ஏலக்காய் - 3

கிராம்பு - 4

சோம்பு - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

தயிர் - கால் கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

புதினா இலை

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, பட்டை, நட்சத்திர சோம்பு, ஏலக்காய், கிராம், சோம்பு சேர்த்து பொரிக்கவும்.

நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வேகவிடவும். இடையே, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பின்னர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பிறகு, தக்காளி சேர்த்து கிளறி நன்றாக வேகவிடவும். தக்காளி வெந்ததும் தயிர் சேர்த்து கிளறவும்.

தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசி, மூன்றரை தம்ளர் தண்ணீர் சேர்த்து, கூடவே, புதினா இலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு மிதமான தீயில் ஒரு விசில் விட்டு வேகவிட்டு இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான குஸ்கா ரெடி..!

You'r reading சுலபமா சுவையா செய்யலாம் குஸ்கா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ம்ம்ம.. நாவூறும் ருசியில் கருவாடு தொக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்