அவரைக்காய் உருளைக்கிழங்கு மசாலா கிரேவி

Avarakkai urulaikizhangu masala gravy recipe

சுவையான அவரைக்காய் உருளைக்கிழங்கு மசாலா கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 100 கிராம்

அவரைக்காய் - 100 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - ஒன்று

சிகப்பு மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

குழம்பு மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை

கொத்தமல்லி

உப்பு

செய்முறை:

ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயத்துடன் ஒரு தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் அவரைக்காயை சேர்த்து வதக்கவும்.

வீட்டு மிளகாய் தூள் மற்றும் சிகப்பு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

இறுதியாக, கொத்தமல்லி தூவி எடுத்தால் சுவையான அவரைக்காய் உருளைக்கிழங்கு மசாலா கிரேவி ரெடி..!

You'r reading அவரைக்காய் உருளைக்கிழங்கு மசாலா கிரேவி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓட்டல் ஸ்டைலில் முட்டைகோஸ் கூட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்