உடலுக்கு சத்தான பசலைக் கீரை கூட்டு ரெசிபி

Pasalai keerai kootu recipe

உடலுக்கு மிகவும் சத்து தரும் பசலைக்கீரை கூட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 200 கிராம்

சீரகம் - அரை டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு

காய்ந்த மிளகாய்

பெருங்காயத்தூள்

பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - 3

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - ஒன்று

பசலை கீரை - 250 கிராம்

சாம்பார் - 2போடி டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில், ஒரு குக்கரில் துவரம் பருப்பு கழுவி போட்டு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ரூ வாணலியில் என்னைவிட்டு சூடானதும் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

பிறகு சின்ன வெங்காயம் நறுக்கி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர், தக்காளி சேர்த்து வதங்கியதும், பசலை கீரை சேர்த்து வதக்கவும்.

கீரை பாதி வெந்து சுருங்கியதும், சாம்பார் போடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
பச்சை வாசனை போனதும் வேக வைத்த கீரை, உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவிடவும்.
இறுதியாக, ஒரு வாணலியில் என்னைவிட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெங்காயம் சேது பொரித்து கீரையில் சேர்த்து கிளறி இறக்கவும்.
அவ்ளோதாங்க சுவையான கீரை கூட்டு ரெடி..!

You'r reading உடலுக்கு சத்தான பசலைக் கீரை கூட்டு ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐபிஎல் மட்டுமில்ல உலகக்கோப்பையிலும் தொடரும் தோனியின் ருத்ரதாண்டவம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்