குழந்தைகள் விரும்பும் பட்டர் பிஸ்கட் ரெசிபி

Crispy Butter Biscut Recipe

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பட்டர் பிஸ்கட் எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் & ஒரு கப் (225 கிராம்)

பொடித்த சர்க்கரை & ஒரு கப்

அனைத்துக்கும் உபயோகமாகும் மாவு & இரண்டே கால் கப்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில், வெண்ணெய்யை போட்டு பீட்டரை வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

வெண்ணெய் மென்மையானதும் பொடித்த சர்க்கரை சேர்த்து கட்டி இல்லாமல் கலந்துக் கொள்ளவும்.

பிறகு, மாவு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இந்த மாவை நன்றாக நீளமாக உருட்டி, பிஸ்கட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

இவற்றை, பேக்கிங் டிரேயில் வைத்து சுமார் 13 & 15 நிமிடங்கள் 375 டிகிரி தில் வேகவிடவும்.

அவ்ளோதாங்க.. சுவையான மற்றும் கிறிஸ்பியான பட்டர் பிஸ்கட் ரெடி..!

You'r reading குழந்தைகள் விரும்பும் பட்டர் பிஸ்கட் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான முட்டை பட்டர் மசாலா ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்