சண்டே ஸ்பெஷல் இறால் உருண்டை ரெசிபி

Crispy Prawn Balls Recipe

நாளைக்கு சண்டே.. ஸ்பெஷலா ஏதாவது செய்யனும்ல.. அதனால், மொறு மொறுப்பான இறால் உருண்டை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - ஒன்று

வெங்காயம் - அரை பகுதி

முட்டை - 2

சோள மாவு - 2 டீஸ்பூன்

பிரெட் க்ரம்ப்ஸ் - கால் கப்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் இறால்களின் தோல் உரித்து மஞ்சள், உப்பு சேர்ந்த தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இறால்களை துண்டுகளாக வெட்டி கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.

அத்துடன், மிளகுத்தூள், சோயா சாஸ், அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
கூடவே, நன்றாக அடித்த முட்டை, சோள மாவு, பிரெட் க்ரம்ப்ஸ் சேர்த்து மிதமாக கலந்துக் கொள்ளவும்.

இந்த கலவையில் இருந்து சிறிய பகுதிகளாக எடுத்து பிரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி உருண்டைகளாக வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான இறால் உருண்டை ரெடி..!

You'r reading சண்டே ஸ்பெஷல் இறால் உருண்டை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராசன்செல்லப்பா போர்க்கொடி... அதிமுகவில் கோஷ்டி பூசலா? ஓபிஎஸ், இபிஎஸ் கருத்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்