ஸ்பைசி நண்டு ஆம்லெட் ரெசிபி

Spicy Crab Omelette Recipe

ஸ்பைசியான நண்டு ஆம்லெட் ரெசிபி எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

நண்டு மசாலா & ஒரு கப் (ஓடு நீக்கியது)

முட்டை - 2

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

மிளகு - சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை

கொத்தமல்த்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில், ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். கூடவே, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, நண்டு மசாலா கிரேவியில் இருந்து ஓடு நீக்கிய நண்டு, மிளகு & சீரகத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையை முட்டையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை ஊற்றி பரப்பவும். அதன்மீது மிளகுத்தூள் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான நண்டு ஆம்லெட் ரெடி..!

You'r reading ஸ்பைசி நண்டு ஆம்லெட் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'எந்த வசதியும் செய்து தரவில்லை' - தமிழக அரசுக்கு எதிராக ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்