சத்தான கொள்ளு சட்னி ரெசிபி

Healthy Gram Dal Chutney Recipe

உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு சட்னி எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

கொள்ளு - அரை கப்

தேங்காய்த் துருவல் - கால் கப்

காய்ந்த மிளகாய் - 5

பூண்டு - 2 பல்

புளி - ஒரு துண்டு

சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை

கடுகு

உளுத்தம் பருப்பு

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொள்ளு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

அதேபோல், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.
தொடர்ந்து, தேங்காய்த் துருவலை சேர்த்து வறுக்கவும்.

தற்போது, மிக்ஸி ஜாரில் கொள்ளு, தேங்காய்த் துருவல், புளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
இறுதியாக, தாளிப்பு கரண்டியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறவும்.

சுவையான கொள்ளு சட்னி ரெடி..!

You'r reading சத்தான கொள்ளு சட்னி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான வேர்கடலை சாதம் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்