சுவையான பாசிப் பருப்பு சாம்பார் ரெசிபி

Tasty Tiffen Sambhar Recipe

இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான சைட் டிஷ் பாசிப் பருப்பு சாம்பார் எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு - முக்கால் கப்

துவரம் பருப்பு - கால் கப்

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 4

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 2

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாயத்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

வெந்தயம் - கால் டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் பாசிப் பருப்பு, துவரம் பருப்பு போட்டு நன்றாக கழுவி குக்கரில் போடவும்.

அத்துடன், நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், உப்பு போட்டு சுமார் 2 விசில் விடவும்.

பருப்பு வெந்துள்ளதா என்று சோதித்தப் பிறகு கடைந்துக் கொள்ளவும்.

இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

இடையே, வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெந்தயம், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சாம்பாரில் சேத்து கிளறவும்.

இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான பாசிப் பருப்பு சாம்பார் ரெடி..!

You'r reading சுவையான பாசிப் பருப்பு சாம்பார் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சத்தான கொள்ளு சட்னி ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்