அசத்தலான சுவையில சிக்கன் லாலிபாப் ரெசிபி

Tasty Chicken Lollipop Recipes

வீட்டிலேயே எளிதாகவும், சுவையாகவும் சிக்கன் லாலிபாப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ (இறக்கை பகுதி)

முட்டை - ஒன்று

சோயா சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - டேபிள் டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

மைதா மாவு - கால் கப்

சோள மாவு - கால் கப்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

சிக்கன் இறக்கைகளில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து அதன் ஒரு ஓரத்தில் வெட்டியப் பிறகு, சதைகளை ஒரு பக்கமாக பீய்த்து தள்ளி லாலிபாப் போன்று தயாரிக்கவும்.

ஒரு கிண்ணத்தில் சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.

சிக்கன் மசாலாவுடன் நன்றாக கலந்ததும் மூடிபோட்டு சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

மற்றொரு கிண்ணத்தில், மைதா மாவு, சோள மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், முட்டை, உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

ஊற வைத்த சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, இந்த கலவையில் முக்கி எடுத்து சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான சிக்கன் லாலிபாப் தயார்.

You'r reading அசத்தலான சுவையில சிக்கன் லாலிபாப் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈசியா செய்யலாம் தந்தூரி சிக்கன் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்