அருமையான சுவையில் பாலக் புலாவ் ரெசிபி

Tasty Palak Pulav recipe

அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய பாலக் கீரையைக் கொண்டு புலாவ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

பாலக் கீரை - அரை கட்டு

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 3

பெரிய வெங்காயம் - 1

கிராம்பு - 3

ஏலக்காய் - 3

பிரிஞ்சி இலை

பட்டை

சீரகம் - அரை டீஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில், பாலக்கீரையை சுத்தம் செய்து வைக்கவும்.

பிறகு, மிக்ஸியில் ஒரு பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பாலக்கீரை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம் சேர்த்து பொரிக்கவும்.

பிறகு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அரைத்து வைத்து பாலக் கீரை விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

தற்போது, கழுவி சுத்தம் செய்து ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறவும்.
பின்னர், ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.

குக்கர் மூடி போட்டு ஒரு விசில்விட்டு வேகவிடவும்.

பிறகு, மிதமாக கிளறி இறக்கவும்.

சுவையான பாலக் கீரை புலாவ் ரெடி..!

You'r reading அருமையான சுவையில் பாலக் புலாவ் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சத்தான முருங்கைக்கீரை சாம்பார் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்