வித்தியாசமான சுவையில் மஞ்சள் பூசணிக்காய் அல்வா ரெசிபி

Tasty Yellow Pumpkin Halwa Recipe

வீட்டிலேயே ரொம்ப சுலபமா மஞ்சள் பூசணிக்காய் அல்வா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப்

சர்க்கரை - 1 கப்

முந்திரி - 10

காய்ந்த திராட்சை - 10

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

நெய் - டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருக்கவும்.

அதில், முந்திரியை போட்டு வறுக்கவும். முந்திரி வறுப்பட்டதும் காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில் மீதமுள்ள நெய்விட்டு சூடானதும், பூசணிக்காய் சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு நன்றாக வேகவிடவும்.
தொடர்ந்து, சர்க்கரை சேர்த்து கிளறி வேகவிடவும்.

இடையே, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.

சுவையான மஞ்சள் பூசணிக்காய் அல்வா ரெடி..!

இரத்தக் குழாய்களை காத்திடும் பழங்கள்

You'r reading வித்தியாசமான சுவையில் மஞ்சள் பூசணிக்காய் அல்வா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நியூசி.யின் தொடர் வெற்றிக்கு குழிபறித்த பாகிஸ்தான்; 1992 வரலாறு மீண்டும் திரும்புமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்