சுவையான அவல் பால் பாயாசம் ரெசிபி

Yummy Aval milk Payasam Recipe

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அவல் பால் பாயாசம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அவல் - ஒரு கப்

பால் - 3 கப்

பாதாம்

முந்திரி

ஏலக்காய் பொடி

வெல்லப்பாகு

நெய்

செய்முறை:

வாணலியில் நெய் சேர்த்து உருக்கி பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.

அதே நெய்யில், அவல் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.

அதே வாணலியில் பால் ஊற்றி காய்ச்சி கொதி வந்ததும், அவல், ஏலப்பொடி சேர்த்து வேகவிடவும்.

அவல் வெந்ததும், வெல்லப்பாகு சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் விடவும்.

இறுதியாக, வறுத்து வாய்த்த முந்திரி, பாதாம் சேர்த்து பரிமாறவும்.

சுவையான அவல் பால் பாயாசம் ரெடி..!

குழந்தைகள் விரும்பி பருகும் பன்னீர் பாயாசம் ரெசிபி

You'r reading சுவையான அவல் பால் பாயாசம் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உயர்வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு; அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்