அசத்தலான சுவையில் உருளைக்கிழங்கு சாட் மசாலா ரெசிபி

Spicy Potato Chat Masala Recipe

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சாட் மசாலா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

வேகவைத்த உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் - 1

இஞ்சி - ஒரு துண்டு

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

மல்லித்தூள் - அரை தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

சாட் மசாலா - அரை தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வேக விடவும்.

கூடவே, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தூள், மிளகுத்தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.

பின்னர், சாட் மசாலா, தக்காளி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் விடவும்.

இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பரிமாறும்போது, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிஸ்ச்சர் , கொத்தமல்லித்தழை, சாட் மசாலா தூவி, தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தால் அசத்தலாக இருக்கும்..

அசத்தலான சுவையில் உருளைக்கிழங்கு சாட் மசாலா ரெசிபி ரெடி..!

காரசாரமான மிளகாய் உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி

You'r reading அசத்தலான சுவையில் உருளைக்கிழங்கு சாட் மசாலா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான அவல் பால் பாயாசம் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்