ஆரோக்கியமான கொண்டைக்கடலை தோசை ரெசிபி

Tasty Bengal Gram Dosa Recipe

உடல் எடையை ஆரோக்கியமான வழியில் அதிகப்படுத்த நினைப்போர் இந்த ரெசிபியை தொடர்ந்து செய்து சாப்பிட்டு வாங்க.. சரி, இப்போ கொண்டைக்கடலை தோசை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 3 கப்

இட்லி அரிசி - ஒரு கப்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில், கொண்டைக்கடலை, இட்லி அரிசி, வெந்தயத்தை தனித்தனியாக சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, கொண்டைக்கடலை, வெந்தயத்தை கிரைண்டைரில் மையாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

இதேபோல், அரிசியை மையாக அரைத்து கொண்டைக்கடலை மாவுடன் சேர்க்கவும். கூடவே, உப்பு சேர்த்து நன்றாக கரைத்து சுமார் 5 மணி நேரம் புளிக்கவிடவும்.

பிறகு, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்து, வழக்கம்போல் தோசை சுட்டு சுடச்சுட பரிமாறவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டைக்கடலை தோசை ரெடி..!

சுவையான கோதுமை ரவை பாயாசம் ரெசிபி

You'r reading ஆரோக்கியமான கொண்டைக்கடலை தோசை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சத்து நிறைந்த பச்சை பயறு இட்லி ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்