சுவையான கொள்ளு அடை ரெசிபி

Yummy Horse Gram Adai Recipe

உடலுக்கு மிகவும் சத்து தரும் கொள்ளு அடை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கொள்ளு - கால் கிலோ

வெங்காயம் - 4

பச்சை மிளகாய் - 4

எண்ணெய்

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை:

முதலில் கொள்ளுவை நன்றாக கழுவி சுத்தம் செய்து, குக்கரில் நன்றாக வேகவிடவும்.

இதனை, ஆற வைத்து பின்னர் மிக்ஸியில் மையாக அரைக்கவும்.

இந்த மாவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

மாவை அடை பதத்திற்கு தயார் செய்யவும்.

தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு பிடி மாவு எடுத்து அடை போல் தட்டிக் கொள்ளவும். அதன் ஓரங்களில் எண்ணெய்விட்டு வேகவிடவும்.

ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான கெள்ளு அடை தயார்.

அருமையான சுவையில் பாலக் புலாவ் ரெசிபி

You'r reading சுவையான கொள்ளு அடை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆரோக்கியமான கொண்டைக்கடலை தோசை ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்