சுவையான ஏரி மீன் பொரிச்சல் ரெசிபி

Lake Fish Fry Recipe

சுவையான ஏரி மீன் பொரிச்சல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மீன் - 2

மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி

மிளகு பொடி - அரை தேக்கரண்டி மல்லி பொடி - ஒரு

தேக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு - அரை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் மீனை கழுவி சுத்தம் செய்யவும்.

ஒரு கிண்ணத்தில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா மல்லித் தூள் இஞ்சி பூண்டு விழுது மிளகுத்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்.

தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடா கட்டும். அதற்குள் தயாராக உள்ள மசாலாவை மீனின் மீது தடவவும்.

தவா சூடானதும் ஒவ்வொரு மீனையும் போட்டு வேக விடவும். மீன் பாதி வெந்ததும் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

ஸ்பைசியான ஏரி மீன் பொரிச்சல் ரெடி..!

சுவையான முருங்கைக்காய் கார குழம்பு ரெசிபி

You'r reading சுவையான ஏரி மீன் பொரிச்சல் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக இளைஞர் அணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்