சூப்பரான சுவையில் வஞ்சரை மீன் ஆம்லெட் ரெசிபி

Spicy Fish Omelette Recipe

வித்தியாசமான சுவையில் வஞ்சரை மீன் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வஞ்சிரம் மீன் - இரண்டு துண்டு

முட்டை - 2

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1

மிளகு

எண்ணெய்

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும்.

ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து மீன் துண்டுகளை அதனுடன் சேர்த்து கலந்து ஊறவிடவும்.

மற்றொரு கிண்ணத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

தற்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை இரண்டு பக்கமும் நன்றாக வறுத்து எடுக்கவும்.

மீன் வெந்ததும் அதை ஆறவைத்து முட்களை எடுத்து துண்டுகளாகக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் முட்டை கலவையை ஊற்றி பரப்பவும்.

அதன்மீது மீன் துண்டுகளை சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

வித்தியாசமான சுவையில் மீன் ஆம்லெட் ரெடி..!

You'r reading சூப்பரான சுவையில் வஞ்சரை மீன் ஆம்லெட் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'மத்திய பட்ஜெட்டில் மாற்றத்திற்கான அறிகுறிகள் இல்லை'

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்