சுவையான பச்சைப் பயறு வடை ரெசிபி

Crispy Green Lentils Vada Recipe

வீட்டிலேயே சுவையான பச்சைப் பயறு வடை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு - 2 கப்

பச்சை மிளகாய் - 6

இஞ்சி - சிறு துண்டு

சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில், பச்சை பயறில் தண்ணீர் ஊற்றி சுமார் 8 மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு, மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அத்துடன், பச்சை பயறை சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அதில், சீரகம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கலவையில் இருந்து

கொஞ்சமாக எடுத்து தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான பச்சை பயறு வடை ரெடி..!

சுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் ரெசிபி

You'r reading சுவையான பச்சைப் பயறு வடை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆரோக்கியம் நிறைந்த காராமணி சுண்டல் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்