சுவையான பன்னீர் கீரை துவையல் ரெசிபி

Healthy Paneer Spinach Chutney Recipe

உடலுக்கு சத்து தரக்கூடிய பன்னீர் கீரை துவையல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கீரை - ஒரு கட்டு

பன்னீர் - 150 கிராம்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

வெங்காயம் - ஒன்று

பூண்டு - 3

தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்

உப்பு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும், சீரகம் போட்டு பொரிக்கவும்.

அடுத்து, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, பொடியாக நறுக்கிய கீரை, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து வேக விடவும்.

வெந்ததும், தயிர் சேர்த்து கலந்து ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் துருவிய பன்னீர் சேர்த்து கிளறி பரிமாறலாம்.

சுவையான பன்னீர் கீரை துவையல் ரெடி..!

சத்தான முருங்கைக்கீரை சாம்பார் ரெசிபி

You'r reading சுவையான பன்னீர் கீரை துவையல் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈசியா செய்யலாம் வெண்ணிலா ஸ்பாஞ் கேக் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்